dark_mode
Image
  • Friday, 29 November 2024

எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய 583 பொது பெட்டிகள் இணைப்பு! ரயில்வே நிர்வாகம் தகவல்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய 583 பொது பெட்டிகள் இணைப்பு! ரயில்வே நிர்வாகம் தகவல்
நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களில் தேவைக்கேற்ப பயணிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.இந் நிலையில் நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் புதியதாக இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திலீப் குமார் கூறியதாவது; ரயில்களில் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு என்றுமே முன்னுரிமை உண்டு. அவர்களுக்கு அதிக வசதிகள் வழங்க ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 583 புதிய பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அவை 229 ரயில்களில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த மாதத்தில் மேலும் 1000 பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 647 ரயில்களில் கூடுதலாக இணைக்க திட்டமிட்டு உள்ளோம்.புதிய பெட்டிகள் இணைப்பு மூலம் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடுதலாக பயணிக்கலாம். வரும் 2 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படும். அதில் 6000 பொது பெட்டிகள், 4000 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகும். இந்த வசதிகள் வந்தபின்னர் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய 583 பொது பெட்டிகள் இணைப்பு! ரயில்வே நிர்வாகம் தகவல்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description