dark_mode
Image
  • Friday, 29 November 2024

உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.

கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து ‘ஆவே மரியா’ என முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் இந்த ஆண்டு பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேராலய திருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

பேராலய திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் பொதுமக்கள் இறங்காமல் இருக்கவும் குளிக்க தடை விதித்தும் கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவை பாதை நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 6ம் தேதியும், மறுநாள் அதாவது செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர் பவனியும் நடைபெறுகிறது.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி கொடியேற்றத்தைக்காண தூத்துக்குடி, மதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர். கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து ‘ஆவே மரியா’ என முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்

உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description