உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு: புடினிடம் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விவகாரத்தில் உங்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளேன்.
நான் முன்னர் கூறியதுபோல், பிரச்னைகள் அனைத்திற்கும் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம். மனிதநேயத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த பிரச்னையில் அமைதி ஏற்படுவதற்கு இந்தியா தேவையான உதவிகளை வழங்கும்.
இவ்வாறு மோடி பேசினார்.கடந்த 2022ம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக மேற்கத்திய நாடுகள் பல பொருளாதார தடைகள் விதித்த போதும், அதனை புடின் கண்டுகொள்ளவில்லை. இந்த பிரச்னையில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாக கூறியிருந்த பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்றிருந்த போதும், இரு நாடுகள் இடையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், உக்ரைன் பிரச்னைக்கு தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.