dark_mode
Image
  • Friday, 29 November 2024

உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!

உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!

க்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்கி வருவதால் ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது.

இதற்கிடையே ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்து, அந்நாட்டின் திட்டத்தை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சர் ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் கமிஷின் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

நீதித்துறை அமைச்சர் டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா குறித்து அரசும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த 4 பேருக்கு பதிலாக முக்கியமான அமைச்சர் பதவிக்கு புதிதாக யாரை நியமிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்திற்கான அந்த கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த ராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description