இஸ்ரேலில் சிக்கியுள்ள 5 ஆயிரம் கன்னடர்கள்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கர்நாடக பாஜக தலைவரும் எம்பியுமான நளின் குமார் கட்டீல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.