dark_mode
Image
  • Friday, 29 November 2024

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதுக்கீடு 1.75 லட்சமாக இருக்க வாய்ப்பு..!

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதுக்கீடு 1.75 லட்சமாக இருக்க வாய்ப்பு..!

வுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஆண்டு தோறும் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். உலகம் முழுவதும் இருந்து அவர்கள் அங்கு சென்று தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள்.

 

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதுக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இந்தியா-சவுதி அரேபியா இடையே நேற்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளீதரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரகளுக்கான இணை அமைச்சர் ஸ்மிருதிஇராணி ஆகியோர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துறை அமைச்சர் டாக்டர் தவ்பீக் பின் பஸ்வான் அல் ரபியாவை அவர்கள் சந்தித்து விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதுக்கீடு 1.75 லட்சமாக இருக்க வாய்ப்பு..!

comment / reply_from

newsletter

newsletter_description