dark_mode
Image
  • Friday, 29 November 2024

இதுதான் அம்பானி.. நொடிக்கு கிட்டதட்ட ஒரு கோடி.. 15 நிமிடங்களில் ரூ.53000 கோடிக்கு அதிபதியானார்!

இதுதான் அம்பானி.. நொடிக்கு கிட்டதட்ட ஒரு கோடி.. 15 நிமிடங்களில் ரூ.53000 கோடிக்கு அதிபதியானார்!

நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி பிஸ்னஸ் உலகில் பல வியக்கத்தக்கச் சாதனைகளைப் படைத்து வருகிறார்.

அப்படி தான் கடந்த வாரம் அவர் வெறும் 15 நிமிடங்களில் ரூ.53000 கோடிக்கு அதிபதி ஆகியிருக்கிறார். அதை எப்படி அவர் சாத்தியமாக்கினார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் இப்போது கோடீஸ்வரக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஆசியாவின் கோடீஸ்வரக்களில் லிஸ்டில் வெகு சில இந்தியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

முகேஷ் அம்பானி: ஆனால், இப்போது கணிசமான அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர். இந்தியா பிஸ்னஸ் செய்ய ஏதுவான இடமாக மாறியது இதற்குக் காரணமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது மிகப் பெரிய பணக்காரர் என்றால் அது அம்பானி தான். அவருக்கு அடுத்த இடத்தில் அதானி இருக்கிறார். இதற்கிடையே ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் சொத்து வெறும் 15 நிமிடங்களில் ரூ.53000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அது எப்படி என கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.

15 நிமிடங்களில் அம்பானி சொத்து ரூ.53000 கோடி உயர்ந்த நிகழ்வு கடந்த வாரம் நடந்துள்ளது. அதாவது கடந்த வியாழக்கிழமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் 47வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக வழக்கம் போல அம்பானி முதலீட்டாளர்களிடையே உரையாற்றினார். அவர் பேசத் தொடங்கிய உடனேயே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மளமளவென அதிகரித்தது.

ரிலையன்ஸ்: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வரும் காலத்தில் என்ன திட்டம் வைத்துள்ளனர், வருமானம் மற்றும் லாபத்தை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் எனப் பல விஷயங்கள் குறித்தும் முகேஷ் அம்பானி பேசினார். அவர் பேசப் பேச ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்தன. இதன் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.53,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

உயர்வு: உலக பணக்காரர்களின் செல்வத்தை டிராக் செய்யும் ஃபோர்ப்ஸ் இதழின்படி ஆகஸ்ட் 29ம் தேதி அவரது சொத்து மதிப்பு ரூ. 982287 கோடியாக (117.1 பில்லியன் டாலர்) இருந்தது. அதேநேரம் அவர் மாநாட்டில் பேசத் தொடங்கிய 15 நிமிடங்களில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.64 சதவீதம் உயர்ந்து ரூ.3074.80ஐ எட்டியது.. இதுவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பும் உயரவும் ரிலையன்ஸின் மேஜர் பங்குதாரரான முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு உயரவும் காரணமாக இருக்கிறது.

ரிலையன்ஸ் பங்குகள்: அன்றைய தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு ரூ. 3042.90ஆக இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அன்றைய தினம் 20.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் சார்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு 1:1 போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களிடம் இப்போது 100 ரிலையன்ஸ் பங்குகள் இருந்தால் 100 பங்குகள் கூடுதலாக கிடைக்கும். இதற்கான ரெக்கார்ட் தேதியாகச் செப்டம்பர் 5 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

இதுதான் அம்பானி.. நொடிக்கு கிட்டதட்ட ஒரு கோடி.. 15 நிமிடங்களில் ரூ.53000 கோடிக்கு அதிபதியானார்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description