ஆந்திராவில் வெள்ளம் எதிரொலி: நெல்லை வழியாக செல்கின்ற 2 ரயில்கள் வரும் 7ம் தேதி ரத்து
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெள்ளம் எதிரொலியாக நெல்லை வழியாக செல்லும் 2 ரயில்கள் வரும் 7ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திரா, தெலங்கானாவில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் குண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்கிறது. பல இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் ஆந்திரா, தெலங்கானாவை மையமாக கொண்டு செல்லும் பல ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
தென் மாவட்டங்களிலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சில ரயில்கள் மாற்று மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆந்திர வெள்ளத்தில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி இருப்பதால், வரும் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை, மதுரை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில் நெல்லையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய புருலியா எக்ஸ்பிரசும் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.