ஆட்குறைப்பை தொடங்கிய ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய நிலையில், இன்று முதல் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் தலைமை நிர்வாகம் மின்னஞ்சல் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. நிறுவனத்தின் நலன் கருதி ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தம் 7000 ஊழியர்களை ட்விட்டர் நிறுவனம் நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களின் இமெயில் பாஸ்வேர்டுகளை அவர்களுக்கே தெரியாமல் மாற்றிவிட்டதாகவும், இதை பார்க்கும்போதுதான் சிலர் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதையே அறிந்ததாக ஊழியர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.