அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள 351 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ விதிகளின்படி காலியாகவுள்ள 351 பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.